திருச்செந்தூரில், வருகிற 30-ந்தேதிக்குள்சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை
திருச்செந்தூரில், வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் வேலவன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சிகள் சட்டம் 1998- க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் விதிகள் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தினால், வரியில் 5 சதவீதம் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.
எனவே சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்களிடம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, செக், டி.டி. மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தி ஊக்கத் தொகையினை பெற்று பயன்பெறலாம், என அவர் தெரிவித்துள்ளார்.