திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்தங்க நகையில் பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி நிறைவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்க நகையில் பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
திருச்செந்தூர்:
தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உபயமாகவும், உண்டியல் காணிக்கையாகவும் செலுத்திய தங்க நகைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்வதற்கு வசதியாக, நகைகளில் உள்ள அரக்கு, அழுக்கு மற்றும் கற்கள் உள்பட பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாலா தலைமையில் கடந்த 27-3-23-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த பணி நேற்று முடிவடைந்து. இந்த நிலையில் பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணியை நேற்று காலையில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரா. அருள் முருகன், அறங்காவலர்கள், கணேசன், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தூத்துக்குடி மண்டல துணை ஆணையரும், நகை சரிபார்ப்பு அலுவலருமான வெங்கடேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.