திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வந்தார். அவரை திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமனன் ஆகியோர் வரவேற்றனர்.
அமைச்சர் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குள் சென்று சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தார். பின்னர் அவர்கள் மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர். அவருடன் திருச்செந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story