திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கூட்டம் அலைமோதியது


திருமங்கலம் ஆட்டுச்சந்தையில்  கூட்டம் அலைமோதியது
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

மதுரை

திருமங்கலம்,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கூட்டம் அலைமோதியது. ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆட்டுச்சந்தை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும்.

தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.

ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச்சந்தை நேற்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. வியாபாரிகள், பொதுமக்கள் என கூட்டம் அலைமோதியதால் சந்தை களைகட்டி இருந்தது. 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையானதாக கூறப்படுகிறது.

ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை ேபாகும். ஆனால் நேற்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். போட்டி போட்டு ஆடுகளை விலை பேசி வாங்கி சென்றனர். நேற்று மட்டும் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்று இருக்கும் என தெரிவித்தனர்.

கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், இடநெருக்கடி ஏற்பட்டதாகவும், நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story