திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு


திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு
x

திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் ரூ.3 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனையில் ரூ.3 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-24 பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பஸ் டிரைவர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை அமைத்திட அரசாணை வெளியிட்டார். அதன்படி திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமணையில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் கணபதி தலைமை வகித்தார். துணை மேலாளர் (வணிகம்) பொன்பாண்டி முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் டி.குமரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஓய்வு அறையை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் தா ரமேஷ், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூர் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம், கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன் உள்பட டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) ஈஸ்வரன் நன்றி கூறினார்.


Next Story