திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.50 லட்சம் இலக்கு நிர்ணயம்


திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.50 லட்சம் இலக்கு நிர்ணயம்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.50 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

திருவாரூர்


தீபாவளி பண்டிகையையொட்டி திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.50 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.

தள்ளுபடி விற்பனை

திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிபண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ரூ.50 லட்சம் இலக்கு

இச்சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள், காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.

அதைதொடர்ந்து திருவாரூர் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.50 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளர் அய்யப்பன், தாசில்தார் நக்கீரன், திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் வெங்கடேசன், சுமதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story