தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று ஒரு படகில் வெல்டிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த படகில் திடீரென தீப்பிடித்தது. இதனால் படகில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படகில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதனால் அருகில் இருந்த படகுகளில் தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story