வேம்பார்-புதூரில்தி.மு.க. சாதனைவிளக்க பொதுக்கூட்டம்
வேம்பார்-புதூரில் தி.மு.க. சாதனைவிளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வேம்பாரில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் இமானுவேல், மகேந்திரன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தீர்மானக் குழு இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் புதூரில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக தி.மு.க அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் தி.மு.க அரசின் சாதனைகள் குறித்து பேசினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.