விழுப்புரத்தில் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


விழுப்புரத்தில் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

விழுப்புரம்

விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் பிரசித்தி பெற்ற தாய் மூகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 2-ந் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்று அனுக்ஞை, கணபதி, லட்சுமி ஹோமங்கள், நவக்கிரக பூஜை, தனபூஜை, கோ பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல்கால யாக பூஜை, ஹோமங்கள் 108 திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மங்கள இசை, 2-ம் கால யாக பூஜை, 108 திரவிய ஹோமம், மகா பூர்ணாகுதி, யாத்ராதானமும், காலை 10.30 மணியளவில் கடம் புறப்பாடாகி கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 8 மணியளவில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.


Next Story