விளாத்திகுளம் அரசு பள்ளியில் சட்டக்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டக்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
பள்ளி மாணவர்களுக்கு இந்திய சட்டங்கள் குறித்தும், சட்ட கல்வி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளாத்திகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்னை விநாயகா மிஷன்ஸ் சட்ட கல்லூரி சார்பாக
சட்ட கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராசிரியை சங்கமித்ரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உயர் கல்வியில் சட்ட கல்வி குறித்தும், அதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் சரவண பெருமாள், மகேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story