அத்திக்கடவு- அவினாசி திட்ட பிரதான குழாய் பதிக்க விவசாயிகளிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு


அத்திக்கடவு- அவினாசி திட்ட பிரதான குழாய் பதிக்க  விவசாயிகளிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு  பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
x

பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

ஈரோடு

அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கான பிரதான குழாய் பதிக்க விவசாயிகளிடம் அமைச்சர் சு.முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இதைத்ெதாடர்ந்து பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவிட்டார்.

அத்திக்கடவு- அவினாசி திட்ட பணி

பெருந்துறை தொகுதியின் வறட்சியை போக்க, அத்திக்கடவு- அவினாசி நீரேற்று திட்டம் கடந்த ஆட்சியில் தீட்டப்பட்டு, ரூ.1,620 கோடி மதிப்பீட்டில், பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டப்பணி 95 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இந்த திட்டத்தில் பிரதான குழாய் பதிக்கும் பெருந்துறை ஒன்றியம், முள்ளம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கந்தாம்பாளையத்தில், 800 மீட்டர் தூரத்துக்கு விவசாய நிலத்திலும், 150 மீட்டர் தூரம் நெடுஞ்சாலையிலும் பதிக்கப்படாமல், நிலுவையில் இருந்து வருகிறது.

விவசாய நிலத்துக்குள் குழாய் பதிக்க, சம்பந்தப்பட்ட விவசாயிகள் கேட்ட இழப்பீட்டுத்தொகையை, அதிகாரிகள் தர சம்மதிக்காததால், இன்று வரை இந்த திட்டம் பூர்த்தி ஆகாமல் நிலுவையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

இதுபற்றி அறிந்ததும், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நிலத்துக்கு சொந்தக்காரர்களான கந்தாம்பாளையம் விவசாயிகளை சந்திக்க நேற்று நசியனூர் புதுப்பாளையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு, விவசாயிகளின் பிரதிநிதியான பெரியவேலப்பன் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு நில உரிமையாளர்களான விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் சு.முத்துசாமி, விவசாயிகளின் பிரதிநிதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

இதில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள், தங்களது நிலத்தின் வழியே, அத்திக்கடவு-அவினாசி திட்ட குழாய்களை பதிக்க சம்மதம் தெரிவித்தனர்.

உத்தரவு

இதையடுத்து, நிலுவையில் உள்ள குழாய் பதிக்கும் பணியை, ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என அமைச்சர் சு.முத்துசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பெருந்துறை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி (தெற்கு), சி.பெரியசாமி (கிழக்கு), எஸ்.குணசேகரன் (மொடக்குறிச்சி), பி.செங்கோட்டையன் (சென்னிமலை), மாநில தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மணிராசு, திண்டல் குமாரசாமி, மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story