அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணி வெள்ளோட்டம்
அவினாசி-அத்திக்கடவு வெள்ளோட்டம்
திருப்பூர்
அவினாசி
திருப்பூர், ேகாவை, ஈரோடு ஆகிய மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கை அத்திக்கடவு அவினாசி திட்டம். அத்திட்டப்பணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு அவினாசியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் அடிக்கல் நாட்டி திட்டப்பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பணிகள் நடைபெற்று 98 சதவீதம் வேலை முடிவடைந்த நிலையில் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப வெள்ளோட்டப்பணி நடந்து வருகிறது. அதன்படி அவினாசி அருகே செம்மாண்டம்பாளையத்தில் உள்ள குட்டைக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. குட்டையில் விழும் தண்ணீர் அப்பகுதி மக்கள் மத்தியிலே 60 ஆண்டு கால கனவு நிறைவேற உள்ள மகிழ்ச்சியில் மூழ்கினர்.
Related Tags :
Next Story