அத்திப்பட்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா


அத்திப்பட்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா
x

அத்திப்பட்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் நேற்று வைகாசி மாத திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.

பக்தர்கள் அலகு குத்தி தலைகீழாக தொங்கியப்படி அம்மனுக்கு ஆகாய மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story