பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான குறுமைய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 55 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் மற்றும் 2-வது இடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் தடகள போட்டியில் கலந்து கொள்வார்கள் என ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.


Next Story