பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்
x

பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

தடகள போட்டிகள்

பாரதியார் தினம், குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. அவர்களுக்கு ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகள் தனித்தனியாக நடந்தது. மேலும் 14 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கூடுதலாக உயரம் தாண்டுதல் போட்டியும் நடந்தது.

இதில் ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறு வட்ட அளவில் நடந்த தடகள போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்க பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான தடகள போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறு வட்ட அளவில்....

வருகிற 10-ந்தேதி மாணவிகளுக்கும், 12-ந்தேதி மாணவர்களுக்கும் வாலிபால் போட்டி, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டென்னிஸ், கபடி ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணியளவில் நடக்கிறது. அதே பள்ளியில் வருகிற 16-ந்தேதி மாணவிகளுக்கும், 18-ந்தேதி மாணவர்களுக்கும் ஹேண்ட் பால், கோ-கோ, எறிபந்து, ஆக்கி ஆகிய குழு விளையாட்டு போட்டிகளும் நடக்கிறது. மேற்கண்ட குழு விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே குறு வட்ட அளவில் முதலிடம் பிடித்த அணிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.


Next Story