ஆத்தூர், ஆறுமுகநேரி கோவில்களில்பத்ர தீப வழிபாடு


தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர், ஆறுமுகநேரி கோவில்களில் பத்ர தீப வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூா் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தை அம்மாவாசையை முன்னிட்டு பத்ர தீப வழிபாடு நடைபெற்றது..

இதையொட்டி காலை 7 மணிக்கு கோவிலில் கும்ப பூஜை, தொடா்ந்து அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கோவிலில் முழுவதும் திருவிளக்கேற்றி பத்ர தீப வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இதேபோல் ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் பத்ர தீப வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story