ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

அருப்புக்கோட்ைடயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது, பணம் இருந்த பெட்டியை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்ைடயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றபோது, பணம் இருந்த பெட்டியை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.

ஏ.டி.எம். மையம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் ேதசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே அந்த வங்கியின் ஏ.டி.எம். இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் மின் விளக்குகளை அணைத்துவிட்டு இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார்.

ஏ.டி.எம். உள்ளே உள்ள பெட்டியை உடைக்க முடியாததால் அவர் அங்கிருந்து முயற்சியை கைவிட்டு தலைமறைவானார். இதனால் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

மர்ம நபர் யார்?

இந்த காட்சியை சென்னையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு மையத்தில் இருந்து கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அருப்புக்கோட்டை டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story