ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

திருச்சி

கொள்ளை முயற்சி

திருச்சி உறையூர் பாளையம்பஜார் ரோட்டில் பெரியசெட்டித்தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் புகுந்தார். பின்னர் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடிவிட்டு, சுத்தியல் மற்றும் கட்டிங்பிளேடு மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சைரன் அடித்தபடி போலீஸ் ஏட்டு ராஜசேகர் ரோந்து சென்றார். அவரை கண்டதும் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறிய அந்த மர்மநபர் ஓட்டம் பிடித்தார்.

போலீசார் விசாரணை

உடனே அந்த நபரை ஏட்டு ராஜசேகரும் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story