ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

இடையக்கோட்டை அருகே, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே கொ.கீரனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டிஎம். மையம் உள்ளது. கடந்த 4-ந்தேதி இந்த ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர் ஒருவர் கையால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டார். இதில் ஏ.டி.எம். எந்திரம் லேசாக சேதமடைந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம். எந்திரம் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் சுமதி, கள்ளிமந்தையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து, எந்திரத்தை கையால் சேதப்படுத்தி விட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது 24) என்பதும், அவர் கொ.கீரனூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

--------


Next Story