பண்ருட்டி ஏ.டி.எம். மையத்தில் பேட்டரி, இன்வெர்ட்டர்கள் திருட்டு; நள்ளிரவில் கைவாிசை காட்டிய மா்மநபா்களுக்கு வலைவீச்சு
பண்ருட்டி ஏ.டி.எம். மையத்தில் இருந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை திருடிச்சென்ற மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
பண்ருட்டி,
தனியார் ஏ.டி.எம். மையம்
கடலூா் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பழைய கடலூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை அந்த ஏ.டி.எம். மையத்திற்கு, அப்பகுதி மக்கள் சிலா் பணம் எடுக்க சென்றனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறத்தில் இருந்த அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் தொிவித்தனர்.
மின் இணைப்பு துண்டிப்பு
அதன்போில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,ஏ.டி.எம். மையத்தை பாா்வையிட்டனா். இதில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து போலீசாா் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏ.டி.எம். மையம் அமைந்துள்ள பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபா்கள், ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறத்தில் இருந்த அறை கதவின் பூட்டை உடைத்து, மின் இணைப்பை துண்டித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த அறையில் இருந்த 3 பேட்டரிகள் மற்றும் 3 இன்வெர்ட்டர்களை கழற்றி திருடிச்சென்றது தொியவந்தது.
ஏ.டி.எம். எந்திரம்
இதுகுறித்த புகாாின் போில் பண்ருட்டி போலீசாா் வழக்குப்பதிவு செய்து, மா்மநபா்கள் பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர்களை மட்டும் திருட வந்தார்களா?, அல்லது அவற்றுடன் சேர்த்து ஏ.டி.எம். எந்திரத்தையும் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றபோது, மக்கள் நடமாட்டத்தை அறிந்து கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதுடன், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.