ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு; பணம் தப்பியது


ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு; பணம் தப்பியது
x

ராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டது. ஆனால் பணம் தப்பியது.

விருதுநகர்

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகர் எதிரே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் காவலாளி நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில், அந்த ஏ.டி.எம். மையத்தின் கதவு திறந்து கிடந்ததை நேற்று காலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கவனித்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது, கடப்பாரை கம்பி மூலம் எந்திரம் உடைக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

ஏ.டி.எம். எந்திரத்தின் முன் பகுதியை உடைத்த கொள்ளையர்கள், பணம் வைத்திருக்்கும் பகுதியை உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை கண்டு தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் கூறும் போது, ரூ.5 லட்சம் வரை அந்த ஏ.டி.எம். எந்திரத்துக்குள் பணம் இருந்திருக்கக்கூடும் என தெரிவித்தனர். அந்த பணம் கொள்ளையில் இருந்து தப்பி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.


1 More update

Next Story