கொடுமுடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


கொடுமுடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

கொடுமுடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.கொடுமுடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுமுடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே போலீசார் உயர் அதிகாரிகளுக்கும், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாாிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் போலீசாரும், வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஏ.டி.எம். மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அது இயங்கவில்லை என்பது தெரியவந்தது.. இதற்கிடையே வங்கியின் அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திரத்தை முழுவதுமாக திறந்து பார்த்தனர். அப்போது பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. எந்திரத்தில் இருந்த ரூ.3 லட்சம் அப்படியே இருந்தது.

வலைவீச்சு

இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து கைரேைக நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

ஏ.டிஎம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா இயங்கவில்லை என்பதை தெரிந்துகொண்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இருந்திருக்கலாம். இதனால் மர்ம நபர்கள் அப்படியே விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story