மாணவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்


மாணவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் திருப்பாச்சேத்தியை சேர்ந்த ஒரு மாணவருக்கும், பூவந்தி கிராமத்தை சேர்ந்த மாணவருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த பூவந்தியை சேர்ந்த மாணவரை, திருப்பாச்மாணவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேத்தியை சேர்ந்த மாணவர் தரப்பினர் தாக்க முயன்றார்களாம். இதுகுறித்து அந்த மாணவர், தனது தந்தை மற்றும் சில மாணவர்களுடன் ஒரு காரில் சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர். இதையொட்டி அவர்கள் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டனர்.

அப்போது உருட்டு கட்டையுடன் அங்கு வந்த திருப்பாச்சேத்தியை சேர்ந்த மாணவர் தரப்பினர் 10 பேர், காரை அடித்து நொறுக்கி ஓட்டலுக்குள் புகுந்து அங்கு இருந்த மாணவரையும், அவரது தந்தையையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story