தேனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல்


தேனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் நடந்தது.

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி ராஜாஜி தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி நாகலட்சுமி. இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவருடைய மகன் யுவஹரி அதே பகுதியில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவில் நேற்று முன்தினம் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சந்தோஷ் மகன் கருணா (வயது 25) என்பவர் அங்கு வந்து தானும் விளையாட வருவதாக கூறினார். அதற்கு அங்கிருந்த சிறுவர்கள் மறுப்பு தெரிவித்த போது, யுவஹரியை கருணா தாக்கினார்.

இதில் காயம் அடைந்த கருணா தனது தாயாரிடம் இதுகுறித்து தெரிவித்தார். பின்னர் அவருடைய தாய் நாகலட்சுமி இதுதொடர்பாக விசாரிப்பதற்காக கருணாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரிடமும் கருணா தகராறு செய்து அவரை தாக்கினார். அதை தடுக்க வந்த அவருடைய மகள் ஜெயஸ்ரீயையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கருணா மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story