வாலிபர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்; மோட்டார் சைக்கிள்கள் ஊருணியில் வீச்சு


வாலிபர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்; மோட்டார் சைக்கிள்கள் ஊருணியில் வீச்சு
x

மானூர் அருகே இருதரப்பினர் தகராறில் வாலிபர் உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள்களும் ஊருணியில் வீசப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே இருதரப்பினர் தகராறில் வாலிபர் உள்பட 3 பேர் தாக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள்களும் ஊருணியில் வீசப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள்களில் சென்றனர்

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள எட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் சுடலை சுரேஷ் (வயது 25). அதே ஊரைச்சேர்ந்தவர்கள் இசக்கிபாண்டி, வெள்ளத்துரை.

இவர்கள் 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் நேற்று முன்தினம் மானூர் வந்துவிட்டு ஊருக்கு திரும்பினர். மானூர் வடக்கு தெரு ஊருணி பகுதியில் வந்த போது, எதிரே வாகனம் வந்ததால் ஹாரன் அடித்துச் சென்றனர்.

3 பேர் மீது தாக்குதல்

அப்போது அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், அவர்களை வழிமறித்து 3 பேரையும் தாக்கினர். பின்னர் 2 மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தி அருகில் இருந்த ஊருணியில் தூக்கி போட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சுடலை சுரேஷ் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

6 பேர் கைது

இதுகுறித்து உச்சிமாகாளி மானூர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக மானூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கணேசன் (20), முத்துராஜ் (27) மற்றும் 4 சிறுவர்கள் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் இருகிராமங்களிலும் பதற்றம் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story