ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் மீது தாக்குதல்


ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் மீது தாக்குதல்
x

அரக்கோணம் அருகே ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலரை தாக்கிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 66), ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர். இவர் நேற்று காலை அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அதேபகுதியைச் சேர்ந்த புருஷோதமன் (28), மேகநாதன் (26) ஆகியோர் அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றனர்.

அவர்களை பார்த்து குப்புசாமி, மோட்டார்சைக்கிளில் நிதானமாக செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் குப்புசாமியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதில் காயமடைந்த குப்புசாமி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.


Next Story