அடகுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்


அடகுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே அடகுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி ஜீவா. இவர் அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் குமார் என்பவரிடம் அடகு வைப்பதற்காக தன்னுடைய 1½ பவுன் நகையை கொடுத்தார்.

இ்ந்த நிலையில் சம்பவத்தன்று குமாரிடம் கொடுத்த நகையை ஜீவா திருப்பி தருமாறு கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஜீவாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் குமார், சந்தோசினி, சினேகா, சூரியபிரகாஷ், சங்கர் ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story