விசாரணைக்காக வந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்


விசாரணைக்காக வந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:15:12+05:30)

மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் விசாரணைக்கு வந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல் நடத்திய அவரது மாமனார்,மைத்துனர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் விசாரணைக்கு வந்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது தாக்குதல் நடத்திய அவரது மாமனார்,மைத்துனர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்து வேறுபாடு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பேருந்தூர் கிரசண்ட் நகரை சேர்ந்தவர் ஆசாத்அலி (வயது 41). இவர் கட்டிட ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார். இவருக்கும் தரங்கம்பாடி தாலுகா அரங்கக்குடி காயிதே மில்லத் தெருவை சேர்ந்த முகமது இப்ராகிம்சாகிப் மகள் சபானா

பர்வீனுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சபானா பர்வீன் தனது கணவரிடம் இருந்து பிரிந்து சென்று பெற்றோருடன் அவர்கள் வீட்டில் வசித்து வருகிறார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் சபானா பர்வீன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மீது ஒரு புகார் அளித்தார். இது தொட ர்பாக இருதரப்பினரையு ம் அழைத்து அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை க்கு பின் போலீஸ் நிலையத்தில் இருந்து ஆசாத் அலி வெளியே வந்தார். அப்போது போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஆசாத் அலியை அவரது மாமனார் முகமது இப்ராகிம் சாகிப்(58), அவரது சகோதரர்கள் சதக்கத்துல்லா (53),அன்வர் பாஷா (43) மற்றும் மைத்துனர் முகம்மது இம்ரான்கான் (27) ஆகிய 4 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆசாத் அலி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

4 பே ர் கைது

இது குறித்து ஆசாத் அலி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராஹிம் சாகிப், சதக்கத்துல்லா , அன்வர்பாட்சா, முகம்மது இம்ரான்கான் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story