விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தை சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (வயது 43). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினரான முத்துகிருஷ்ணனுக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்து தனபாலகிருஷ்ணன் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தனபாலகிருஷ்ணன் வெளியூர் சென்று விட்டு, பஸ்சில் வந்து, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முத்துகிருஷ்ணன், கிசான், சங்கரன், செந்தில் முருகன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தனபாலகிருஷ்ணனை வழிமறித்து நீ எப்படி சூப்பிரண்டிடம் புகார் கொடுக்கலாம் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் உள்பட 4 பேரும் சேர்ந்து தனபாலகிருஷ்ணனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்.


Next Story