விவசாயி மீது தாக்குதல்

ஏர்வாடி அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே உள்ள அணைக்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி லட்சுமணன் (வயது 35). இவரது வீட்டின் அருகே பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. அப்போது தோட்டத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த லட்சுமணன், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு லட்சுமணனிடம் ஒலிபெருக்கியில் சத்தத்தை குறைத்து வைக்கும் படி கூறினார். இதுபற்றி சதீஸ், தனது அண்ணன் அய்யப்பனிடம் தெரிவித்தார். இதனால் அய்யப்பன், லட்சுமணனிடம் சென்று தகராறில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று விவசாயி லட்சுமணன் அணைக்கரை அருகே உள்ள ஓடைக்கு குளிக்க சென்றார். இதைப்பார்த்த அய்யப்பன் அவரிடம் சென்று மீண்டும் தகராறு செய்தார். மேலும் அவரை அவதூறாக பேசி தாக்கினார். இதில் காயம் அடைந்த லட்சுமணன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அய்யப்பனை தேடி வருகின்றனர்.






