தந்தை-மகள் மீது தாக்குதல்
வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் தந்தை-மகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி தெற்கு கீழவெளி பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மூத்த மகள் சுருதிகா. இவர் தோப்புத்துறை துள்ளுவெட்டி அய்யனார் கோவில் தெருவை சோ்ந்த வேலவன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் சோமசுந்தரம் குடும்பத்திற்கும், வேலவன் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தன்று சோமசுந்தரம் தனது இளைய மகள் சுவித்தாவுடன் தோப்புத்துறை பகுதியில் நடந்த கோவில் தீமிதி திருவிழாவிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த வேலவன் சோமசுந்தரத்தை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கட்ைட மற்றும் கல்லால் தாக்கி உள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது மகள் சுவித்தாவையும் தாக்கினார். இதில் காயம் அடைந்த சுவித்தா வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்குப்பதிவு செய்து வேலவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.