தேவதானப்பட்டி அருகே பூ வியாபாரி மீது தாக்குதல்


தேவதானப்பட்டி அருகே பூ வியாபாரி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே பூ வியாபாரியை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 25). பூ வியாபாரி. இவரது நண்பர், தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த சஞ்சீவ்குமார். இவரது மகனுக்கு கடந்த 5-ந்தேதி பிறந்தநாள் ஆகும். இதனை கொண்டாடுவதற்காக அன்றை தினம் மகாலிங்கம் ஜி.கல்லுப்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர், நண்பர்களான சக்திவேல், சதீஷ், சஞ்சீவ் குமார் ஆகியோருடன் கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரில் உள்ள பழைய கட்டிடத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

அப்போது மகாலிங்கத்திற்கு அடிக்கடி செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால் அவர் அங்கிருந்து சிறிது தூரம் போன் பேசி கொண்டே நடந்து சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது தலையில் பலத்த காயங்களுடன் மகாலிங்கம் மயங்கி கிடந்தார். இதையடுத்து நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேவதானப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story