வனத்துறை அலுவலர் மீது தாக்குதல்


வனத்துறை அலுவலர் மீது தாக்குதல்
x

தாழையூத்து காப்புகாட்டு பகுதியில் வனத்துறை அலுவரை தாக்கிய பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தாழையுத்து பெண்ணையாறு வனப்பகுதியில் வனத்துறை அலுவலர் பொன்னுரங்கம் (வயது 51) ரோந்து சென்றார். அப்போது சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் திடீரென பொன்னுரங்கத்தை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து வனசரக அலுவலர் ராமநாதன் தலைமையிலான வனத்துறையினர் இதுகுறித்து தாழையூத்து பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தமிழ் பேச தெரியாத நபர் சுற்றி வருவது குறித்து தகவல் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் தாழையூத்து கிராமம் அருகே உள்ள பெண்ணை ஆற்று பகுதியில் சுற்றித்திரிந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆர்த்திமண்டல் (35) என்பவரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.


Next Story