சின்னசேலம் அருகேஅரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் :பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்கு
சின்னசேலம் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கள்ளக்குறிச்சி பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை, ரவிச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளுக்கு பொட்ரோல் போடுவதற்காக சின்னசேலம் அருகே வி.கூட்டுரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் போட்டுள்ளார்.
அப்போது பெட்ரோல் டேங்க் மூடி சரியாக மூட முடியாமல் போனது. அதை மூடுவதற்க அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள ஊழியரான வாசுதேவனூரை சேர்ந்த கந்தன் மகன் நல்லதம்பி (22) என்பவர் ரவிச்சந்திரனை பார்த்து, மோட்டார் சைக்கிளை தள்ளி நிறுத்துமாறு கூறி அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் நல்லதம்பி மீது சின்னசேலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.