ஓட்டல் தொழிலாளி மீது தாக்குதல்


ஓட்டல் தொழிலாளி மீது தாக்குதல்
x

கலவையில் ஓட்டல் தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

கலவை மேட்டு காலனியை சேர்ந்த தனபால் மகன் ஸ்ரீதர் (வயது 36), திமிரி சாலையில் உள்ள பீப் பிரியாணி கடையில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் கடை அருகே உள்ள ஓட்டலில் நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் செல்வா (21) சப்ளையராக வேலை செய்து வருகின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீதர் எதிரே உள்ள கோவில் அருகே ஓய்வெடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த செல்வா, ஸ்ரீதரை ஆபாசமாக திட்டி உள்ளார். இதனால் ஸ்ரீதர் தனது நண்பர் சங்கர் உடன் சென்று செல்வா வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது செல்வா விறகு கட்டையால் ஸ்ரீதரை அடித்துள்ளார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப் பதிவு செய்து செல்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஸ்ரீதர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


Next Story