சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்


சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சட்ட கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

கோயம்புத்தூர்

கோவை

கோவை அரசு சட்டக்கல்லூரியில் ராஜா என்பவர் எல்.எல்.பி இறுதி ஆண்டு படித்து வருகிறார். வடவள்ளியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். குடும்பத்தின் குழ்நிலை காரணமாகவும், கல்வித்தேவைகளுக்காகவும், பகுதிநேரமாக தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாடகை மோட்டார் சைக்கிள் இயக்கி வந்தார். இரவில் வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிச்செல்வதற்காக மோட்டார் சைக்கிளுடன் ரெயில்நிலையத்துக்கு வந்துள்ளார்.

அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதியில்லை என்று கூறி வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த ராஜா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டள்ளார். சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.


Next Story