நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல்


நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 11 Nov 2022 1:00 AM IST (Updated: 11 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தகராறில் முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சேலம்

கெங்கவல்லி:-

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 71). இவருக்கும், துரைசாமி என்பவரின் மகன் கூத்தன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் பெரியசாமி அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவருடைய மகள் காமாட்சி அங்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் கூத்தன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதை தட்டி கேட்ட பெரியசாமியை உருட்டுகட்டையால் கூத்தன் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் கூத்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story