பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்
களக்காடு அருகே பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 41). இவர் படலையார்குளம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த மாடசாமி மகன் முருகன் (49) தான் புதியதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி ரசீது வழங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு முருகன், மேல் அதிகாரிகளிடம் கேட்டு ரசீது வழங்குவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் முருகன், படலையார்குளத்தில் உள்ள கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த முருகன், ஊய்க்காட்டான் ஆகியோர் பஞ்சாயத்து தலைவர் முருகனை அவதூறாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.