கடலூரில்பெண் போலீஸ் மீது தாக்குதல்கணவர் மீது வழக்கு


கடலூரில்பெண் போலீஸ் மீது தாக்குதல்கணவர் மீது வழக்கு
x

கடலூரில் பெண் போலீஸ் மீது தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர்


கடலூர் தேவனாம்பட்டினம் பீச்ரோடு வடிவேல் நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (வயது 39). கார் டிரைவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (33). கடலூர் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

நேற்று குடிபோதையில் வந்த விஜய் ஆனந்த், ராஜேஸ்வரியிடம் நீ வேலைக்கு போகக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசுமாறு செல்போனை கொடுத்தாராம். ஆனால் அவர் பேசவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விஜய்ஆனந்த் என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேச மாட்டாயா? என்று ராஜேஸ்வரியை ஆபாசமாக பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் காயமடைந்த அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி ராஜேஸ்வரி கடலூர் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜய் ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story