தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்


தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
x

தனியார் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் மற்றொரு பஸ் டிரைவர் மீது வழக்கு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள வளவனூரை சேர்ந்தவர் முரளி (வயது 37). இவர் விழுப்புரம்- வளவனூர் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். விழுப்புரம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் விழுப்புரம்- புதுச்சேரி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று முரளியின் பஸ், வளவனூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது மோகன், தனது பஸ்சின் ஹாரனை தொடர்ந்து அடித்து வந்துள்ளார். இதுபற்றி முரளி, மோகனிடம் சென்று ஏன் தொடர்ந்து ஹாரன் அடிக்கிறாய்? என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோகன், முரளியை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முரளி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மோகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story