கடலூர் முதுநகர் அருகேஅரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்வாலிபர் மீது வழக்கு
கடலூர் முதுநகர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்,
குறிஞ்சிப்பாடி தாலுகா மேல் பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 42). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார்.
அந்த பஸ் கடலூர் முதுநகர் அருகே உள்ள பூண்டியங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனால், மோகன்குமார் பஸ்சில் 'ஹாரன்' அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் அரசு பஸ்சை வழிமறித்து, டிரைவருக்கு அருகே சென்று மோகன் குமாரை திட்டி, அவரை தாக்கினார். மேலும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
இதில் காயமடைந்த மோகன்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.