சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்


சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்
x

கோபி அருகே சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கிய 2 பெண்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே சூதாட்ட கும்பலை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கிய 2 பெண்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சூதாட்டம்

கோபி அருகே உள்ள புதுகொத்துக்காட்டில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சூதாட்டம் நடப்பதாக கூறப்பட்ட வீட்டுக்கு திடீரென சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் சூதாடுபவர்களை சுற்றி வளைத்து, அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகளையும், சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தார்கள்.

15 பேர் மீது வழக்கு

இதனால் ஆத்திரமடைந்த சூதாட்ட கும்பல் ஒன்று சேர்ந்து போலீசாரை சூழ்ந்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. மேலும் போலீசாரிடம் இருந்த சீட்டு கட்டுகளையும், பணத்தையும் பறித்துக்கொண்டார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கடத்தூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூதாட்ட கும்பல் போலீசாரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Related Tags :
Next Story