பயிற்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்


பயிற்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே பயிற்சி சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் நடந்தது

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்து பயிற்சி பெற்று வருபவர் கிளியனூர் தெற்கு தெருவை சேர்ந்த மோகன்குமார் மகன் பிரவின் (வயது23). இவர் சம்பவத்தன்று மதியம் காளியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு சென்று கொண்டிருந்தார். மணல்மேடு அருகே உள்ள நாராயணமங்கத்தில் ஆற்றங்கரையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அப்பகுதியில் இயற்கை உபாதையை கழித்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நாராயணமங்கலம் வடக்குதெருவை சேர்ந்த சண்முகம் மகன் பாலமுருகன் (30), ஏன் ஆற்றங்கரையோரம் இயற்கை உபாதையை கழித்தாய் என கேட்டுள்ளார். இதனால் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், பிரவினை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

1 More update

Next Story