போக்குவரத்து கழக கிளை செயலாளர் மீது தாக்குதல்


போக்குவரத்து கழக கிளை செயலாளர் மீது தாக்குதல்
x

ராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக கிளை செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ராமநாதபுரம் கிளை தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளராக இருப்பவர் ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த கண்டக்டர் செல்வகுமார் (வயது51). இந்நிலையில் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு காரைக்குடி மண்டலம் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பச்சைமால் தனது ஆதரவாளர்களுடன் வந்தாராம். எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பொதுச் செயலாளர் வருகை புரிந்ததை கிளை செயலாளர் என்ற முறையில் செல்வகுமார் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த பொது செயலாளர் பச்சைமால் தூண்டுதலின்பேரில் பஸ் கண்டக்டர்கள் பாண்டியூர் ரமேஷ் (45), ராமநாதபுரம் தனபால் (40) ஆகியோர் செல்வகுமாரை தாக்கினார்களாம். மேலும் அவதூறாக பேசி சட்டையை கிழித்து மிரட்டினார்களாம். இதுகுறித்து செல்வகுமார் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


Related Tags :
Next Story