பொதுகிணற்றில் தண்ணீர் எடுத்த பெண் மீது தாக்குதல்


பொதுகிணற்றில் தண்ணீர் எடுத்த பெண் மீது தாக்குதல்
x
தர்மபுரி

மொரப்பூர்

மொரப்பூர் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் மனைவி மணிமேகலை (வயது 48). இவர், தனது விவசாய நிலத்துக்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சியுள்ளார். இதனை மணிமேகலையின் உறவினர் பெருமாள் (46) என்பவர் தட்டிக் கேட்டார். மேலும் மோட்டார் சுவிட்சை ஆப் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி மணிமேகலை, பெருமாளின் மகள் தீபிகாவுக்கு போன் செய்து கூறியுள்ளார். தீபிகா பெருமாளுக்கு போன் செய்து ஏன் இப்படி தொந்தரவு செய்கின்றீர்கள் என்று கூறி தந்தையைகண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த பெருமாள் மணிமேகலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தினார்.


Next Story