சிறுத்தை தாக்கி இறந்த பசுமாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம்
சிறுத்தை தாக்கி இறந்த பசுமாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
நீலகிரி
பந்தலூர்: பந்தலூர் நத்தம்பகுதியை சேர்ந்தவர் வையாபுரி என்பவருடைய மகன் வினோத்குமார். பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது பசுமாடுகள் புல்வெளிக்கு மேய சென்றது. அப்போது சுமார் 2½ வயதுடைய பசுமாட்டை சிறுத்தை ஒன்று தாக்கி கொன்றது. தொடர்ந்து பசுமாட்டின் உரிமையாளர் வினோத்குமார் தேவாலா வனத்துறையினரிடம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று மனு கொடுத்தார்.
இந்த நிலையில் கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி நேற்று வனத்துறை சார்பில் ரூ.30 ஆயிரம் நிவாரணதொகையை உதவி வனபாதுகாவலர் கருப்புசாமி பசுமாட்டின் உரிமையாளர் வினோத்குமாருக்கு வழங்கினார். இதில் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர்கள் பாலகிருஸ்ணன், சுபைத், வனகாப்பாளர் பரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story