வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் பறிப்பு


வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரம் பறிப்பு
x

வாலிபரை தாக்கி ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

திருச்சி

திருச்சி கோனார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த 2 பேர் அவரை சரமாரியாக தாக்கி, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story