சந்தன மரத்தை வெட்டி திருட முயற்சி


சந்தன மரத்தை வெட்டி திருட முயற்சி
x

சந்தன மரத்தை வெட்டி திருட முயற்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் இளங்கோவன். ஆசிரியரான இவரது வீட்டின் பின்புறம் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மரம் ஒன்றை நட்டு வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் பணிக்கு சென்றுவிட்டனர். பணி முடிந்து மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பின்னால் இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் இதுகுறித்து அரியலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story