பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 3 பேருக்கு வலைவீச்சு


பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 3 பேருக்கு வலைவீச்சு
x

பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு

பிளஸ்-2 மாணவி

செங்கல்பட்டு மாவட்டம் இடைகழிநாடு அருகே 56, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மகள் சுவிதா (வயது 17). கடப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

தினமும் நல்லூர் பகுதியில் இருந்து, ஷேர் ஆட்டோ மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல ஷேர் ஆட்டோவிற்காக வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பள்ளி மாணவி காத்திருந்தார்.

கழுத்தை அறுத்தனர்

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பிளேடால் சுவிதாவின் கழுத்தை அறுத்தனர். ரத்தம் வெளியேறுவதை பார்த்த அங்கு இருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

சுவிதாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story