செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி; பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி; பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x

கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சித்தபோது பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

அம்பை;

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த கிராமத்தின் மத்தியில் நேற்று எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவி மாரி செல்வி மற்றும் சமுதாய பெரியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சிக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அனுமதியின்றி செல்போன் கோபுரம் அமைக்க இருப்பது தெரிய வந்த நிலையில் ஊர் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் ஊழியர்கள் பணியை கைவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story